11 February 2025

பயப்படாதிருங்கள் பரன் இயேசு பிறந்துவிட்டார்

பயப்படாதிருங்கள் பரன் இயேசு பிறந்துவிட்டார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   பயப்படாதிருங்கள்

                        பரன் இயேசு பிறந்து விட்டார்

                        கவலைப்படாதிருங்கள்

                        கர்த்தர் இயேசு பிறந்து விட்டார்

 

1.         முன்னணை மீதினில் விண் ஒளி வீசிட

            இயேசு பிறந்தாரே

            மன்னுயிர் பாவங்கள் சாபங்கள் நீக்கிட

            இயேசு பிறந்தாரே

 

                        உதித்தார் உதித்தார் கெம்பீரமாய் -நாம்

                        மகிழ்வோம் மகிழ்வோம் சந்தோஷமாய்

 

2.         கன்னிமரியின் மடியினில்

            பாலன் இயேசு பிறந்தாரே

            எண்ணில்லா தூதர்கள் இன்னிசை

            பாடி இயேசு பிறந்தாரே

 

3.         மந்தையின் மேய்ப்பர்கள் ஆனந்தம்

            கொண்டிட இயேசு பிறந்தாரே

            விண்ணையும் மண்ணையும் ஒன்றாக

            இணைத்திட இயேசு பிறந்தாரே

 

4.         அதிசய தேவன் அற்புத ராஜன்

            இயேசு பிறந்தாரே

            காரிருள் நீக்கிட பேரொளியாகவே

            இயேசு பிறந்தாரே

 

 

YouTube Link
YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...