பரலோகில் வாழும் கூட்டம் என்ன கூட்டம்
பரலோகில்
வாழும் கூட்டம் என்ன கூட்டம்
தேவ
பரமனையே போற்றிப் பாடும் பக்தர் கூட்டம்
அல்லேலூயா அல்லேலூயா என்று ஆடியே பாடும்
கூட்டம்
அப்பன் இயேசு பக்கத்திலே நின்றிடும் பக்தர்
கூட்டம்
அல்லேலூயா அல்லேலூயா ஓசன்னா
- ஆமென்
அல்லேலூயா அல்லேலூயா ஓசன்னா
- 2
1. இருபத்து நான்கு மூப்பர் சூழ்ந்த கூட்டம்
என்றும் சிரம் தாழ்த்தி
தேவனையே பணியும் கூட்டம்
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் என்று
ஓயாமல் சொல்லிப் பாடும் தூதர் கூட்டம்
- அம்மா - பரலோகில்
2. ஆட்டுக் குட்டியானவரின் இரத்தத்தாலே
தம்மை தோய்த்து வெளுத்த பரிசுத்தர் கூட்டம்
குருத்தோலை தங்கள் கையில் ஏந்திக் கொண்டு
ஓசன்னா சொல்லிப் பாடும் பக்தர் கூட்டம்
- இயேசுவுக்கு - பரலோகில்
3. மரித்தவர் முன்னோராக எழுந்திருக்க
பின்பு உயிரோடிருக்கும் நாமும் பறந்து
செல்ல
தூதர் கணங்களோடு வானில் தோன்றி
நம்மை தம்மோடு சேர்க்கும் இயேசு ராஜா கூட்டம்
- பரலோகில்
Comments
Post a Comment