பரவிடும் சுவிசேட திருச்சபையோரே

பரவிடும் சுவிசேட திருச்சபையோரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          பரவிடும் சுவிசேட

                        திருச்சபையோரே,

            பரனை நினைத்துத் தினம் மகிழ்வீரே.

 

1.         பணிந்திடும் சுவிசேஷ

                        சபைக்குள் வந்தோரே,

            பரனருளால் ஜெயமடைந்தீரே.

            துணிவுடனே ஜெயமெனப் புகல்வீரே,

            தோத்ரசங்கீர்த்தனம் துத்யம்

                        செய்வீரே. - பர

 

2.         நித்ய சுவிசேடமே நேர்வழியாமே,

            நிமலனருள் வழிபோவோமே.

            சத்ய மறைபிடிக்கில் வழிதவறோமே,

            தத்வ குணாகரன்

                        தனைத்துதிப்போமே. - பர

 

3.         திருக்குருசில் மரித்தோரது நேசம்,

            தினம் மறவாதே, வைவிசுவாசம்.

            இரக்க புண்ணியங்களால்

                        எழில் நகர்வாசம்,

            இனிபெறலாமென வெண்ணுதல்

                        மோசம். - பர

 

 

- Gna. Samuel

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே