ஆனந்த கீதங்கள் பாடுங்கள் வாழ்த்துங்கள்
ஆண்டவர் பாலனாய் - மண்ணிலே
தோன்றினார்
ஆதாம் செய் பாவங்கள் - சாபங்கள்
- நீக்கவே
அன்னையின் மைந்தனாய் - தாழ்மையாய்
- தோன்றினார் - ஆனந்த
1. மேலோக தூதர்கள் பாட - பூலோக மாந்தர்கள் போற்ற
தாலேலோ கீதம் எங்கும் கேட்குதே - 2
வானாதி வானங்களே களிகூர்ந்து பாடுங்கள்
விண்ணில் நல்லாட்சி தோன்ற - மண் மீட்சி
காண வந்தார் - 2 - ஆனந்த
2. சர்ப்பத்தின் தலையை நசுக்க, சந்தோஷம் எங்கும்
பெருக
சாந்த குமரன் இயேசு தோன்றினார் - 2
சாலேமின் ராஜன் இவர், மகிழ்ந்து கண் தூங்கிடவே
ஜீவனோர் தொட்டில் இல்லை, மாடடையும் கொட்டில்
உண்டு - 2 - ஆனந்த
- Dr. J. R. Isaac Balasingh
https://www.youtube.com/watch?v=h66ASRn-Xr4
No comments:
Post a Comment