பயங்கர பராக்கிரமம் செய்யும்
பயங்கர
பராக்கிரமம்
செய்யும்
தேவன் இருப்பதினால்
அஞ்சிடேன் என்றுமே
ஜெயமே நான் அடைந்திடுவேன்
1. அவர் மா அன்பினால்
என்னை மாற்றி நிதம்
அதிசயம் காட்டி இணங்கச் செய்தார்
ஜெயித்திடுவேன் வீழ்த்திடுவேன்
தேவாவி என் மீது தாங்குவார்
2. அவர் நல்லவரே அவர் வல்லவரே
சோதித்து அறியும் கர்த்தரிவர்
தேர்ச்சி என்றும் உண்டாகும்
காரியம் அவர் மீது சாட்டினேன்
3. அவர் நான் நம்பிடும் எந்தன் தேவனாவார்
உதவிகள் அவரால் கிடைத்திடுமே
உண்மையினை காத்திடுவேன்
எனக்காக யாவையும் செய்குவார்
4. அவர் வார்த்தை என்றும்
எந்தன் உள்ளத்திலே
எரிந்திடும் தீ போல் பரவிடுதே
போதனையே பெற்றிடுவேன்
என்றென்றும் அவர் வாக்கை காப்பேனே
5. அவர் நல் நாமத்தை என்றும்
நான் பாடுவேன்
அவரது கரமே எழும்பிடுமே
விடுதலையை அளித்திடுவார்
எந்நாளும் அவர் நாமம் போற்றுவேன்
YouTube Link
YouTube Link
Comments
Post a Comment