தேவசேனை ஒன்று எழும்புகிறதே
தேவசேனை ஒன்று எழும்புகிறதே
உந்தன் சேவைக்கென்று கிளம்புகிறதே
- 2
உம் பராக்கிரம நாட்கள் இதுவே
உம் யௌவன[1] ஜனம் வெளிப்படுதே - 2
1) சிலுவை நாதரின் ரத்தம் வீணாகிவிடக் கூடாதே
சிந்திய பரிசுத்த ரத்தம் போதுமே மீட்டிடவே
- 2
சிதறி நிற்கும் மாந்தரையும்
மீட்டிடவே இணைத்திடவே
சேனையாய் எழும்ப போதுமே - தேவசேனை
2) கற்று தேறினவர் உயர்த்திக் கொண்டார் தன்னையே
கல்லாமை நீக்கிடவே கரிசனையும் இல்லையே
- 2
கர்த்தரின் கவலையாம் சங்காரமும்
அறியாமலும் புரியாமலும்
காட்டிலும் நாட்டிலும் தடுத்திடுதே - தேவசேனை
3) குழந்தை என்றும் பாராமல் திணித்தாரே ஆபத்திலே
பிஞ்சு என்றும் பாராமல் தீட்டாக்கினார்
கூட்டாக - 2
குழம்பி நிற்கும் சமூகத்தையும்
தூக்கிடவே விடுவிக்கவே
முழங்காலில் நிற்க பெலன் தாருமே - தேவசேனை
4) இரட்சிக்கப்பட்டவர்கள்
இரக்கம் கொண்டார் இல்லையே
இதோ தருகிறேன் என்னையும் என்னுடையவைகளையும்
- 2
இழக்கவும் நொறுங்கவும்
ஆயத்தம் என்றே முழங்கிடுவேன்
கூட்டமாக இன்றே தீவிரம் காட்டினாரே - தேவசேனை
5) வருகைதனை எதிர்நோக்கிடும் திரளான கூட்டத்திலே
பிறக்கும் சந்ததியும் மேல் நோக்கி காத்திருக்க
- 2
உன்னதர் பெலத்தினால் நிறைந்த சேனை
எழும்பிடுதே முழங்கிடுமே
வெற்றியை கூறி மகிழ்ந்திடுமே - தேவசேனை
- Bro. D. Augustine Jebakumar
Comments
Post a Comment