அந்தி
நேரம் வாடை காலம்
விந்தை
இயேசு பாலன்
இந்த
பாரில் நம்மை மீட்க
வந்துதித்தார்
ஆர்ப்பரிப்போம் - 2
அனுபல்லவி
கொண்டாடுவோம்
கொண்டாடுவோம்
விண்
வேந்தனை என்றுமே
பண்
பாடுவோம் பண் பாடுவோம்
ஆனந்த
நாள் இது
1. தீர்க்கன்
சொன்ன வார்த்தை எல்லாம்
திடமாய்
நிறைவுற இன்று
தாவீதூரில்
பாலனாக
தெய்வ
மைந்தன் பிறந்தனரே. - 2 - கொண்டாடுவோம்
2. ஆதாம்
ஏவை செய்த பாவம்
அதனால்
வந்த சாபம்
அனைத்தும்
நீக்கி நம்மை மீட்க
அண்ணல்
இயேசு அவதரித்தார் - 2 - கொண்டாடுவோம்
3. தூய
உள்ளம் தந்து நாமும்
தேவ
பாலனை பணிவோம்
இன்ப
கீதம் பாடி வாழ்த்தி
இயேசு
ராஜனை தொழுதிடுவோம் - 2 - கொண்டாடுவோம்
No comments:
Post a Comment