படைத்தவர் உன்னை கைவிடமாட்டார்

படைத்தவர் உன்னை கைவிடமாட்டார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          படைத்தவர் உன்னை கைவிடமாட்டார்

          பதறாதே மனமே

            அழைத்தவர் உன்னை நடத்திடுவாரே

            அனுதின வாழ்க்கையிலே

 

                        நாம் ஆராதிக்கும் இயேசு நல்லவர்

                        நாம் போற்றிடும் இயேசு பெரியவர்

 

1.         பெயர் சொல்லி அழைத்த உன்னத தேவன்

            ஒருபோதும் உன்னை மறவார்

            காரிருள் நீ நடந்திடும் வேளை

            ஒளியாய் வந்திடுவார் - நாம் ஆராதிக்கும்

 

2.         கடந்ததை நினைத்து அழுதிட வேண்டாம்

            கலங்கிடவும் வேண்டாம்

            தீமைகள் யாவும் நன்மையாய் மாறும்

            நம் இயேசு ஜீவிப்பதால் - நாம் ஆராதிக்கும்

 

3.         வறண்ட நிலங்கள் வயல்வெளியாகும்

            பள்ளங்கள் நிரப்பப்படும்

            தேவனால் கூடும் எல்லாம் கூடும்

            கூடாததொன்றுமில்லையே - நாம் ஆராதிக்கும்

 

4.         அகிலம் ஆளும் ராஜாதி ராஜா

            நம் துணையானாரே

            யெகோவாயீரே போதும் அவரே

            என்றும் நம் வாழ்வினிலே - நாம் ஆராதிக்கும்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு

கிறிஸ்தவ கீர்த்தனைகள்