பயப்படாதே கலங்கிடாதே கண்மணி
பயப்படாதே கலங்கிடாதே
கண்மணி
போல் உன்னை காத்திடுவார்
திகைத்திடாதே அவர் உன் தேவன்
பெலப்படுத்தி உன்னை நடத்திடுவார்
1. யாக்கோபை போல் வனாந்திரமா
யோசேப்பை போல் தனித்த வாழ்வா
வானத்தின் வாசல் திறந்திடுமே
ஆசீர்வாதம் பொழிந்திடுமே
2. பெயர் சொல்லி அழைத்த தேவன்
பிரித்தெடுத்து மீட்ட தேவன்
ரதம் குதிரை ராணுவங்கள்
எதிர் வந்தாலும் எதிர்க்கும் தேவன்
3. ஆயிரமோ பதினாயிரம்
பேர்கள் உன் முன் விழுந்தாலும்
கர்த்தரே உந்தன் அடைக்கலமே
காத்திடுவார் என்றென்றுமே
Comments
Post a Comment