திறப்பில் நிற்க ஆட்கள் வேண்டும்
திறப்பில் நிற்க ஆட்கள் வேண்டும்
தேசத்தை மீட்க ஆட்கள் வேண்டும்
கடைசிக் காலம் சமீபமே
கடமையுணர்ந்தே செயல்படுவோம் - 2
திறப்பில் நின்றிட வா
தேசத்தை மீட்டிட வா
1. அன்பின் தேவனை அறியாத தேசம்
அழிந்து சிதைகின்றதே
உண்மை தேவனை உணராததாலே
உழன்று தவிக்கின்றதே - 2
உழன்று தவிக்கின்றதே - திறப்பில் நின்றிட
2. கண்ணீர் சிந்தி கதறி ஜெபிக்கும்
காலம் இதுவல்லவா
சுயத்தை வெறுத்து சிலுவை சுமக்கும்
தருணம் இதுவல்லவா - 2
தருணம் இதுவல்லவா - திறப்பில் நின்றிட
3. பாவம் சுமந்த பரிசுத்தர் இயேசுவை
பாரில் உரைத்திடுவோம்
நிலத்தில் விழுந்து மரிக்கும் விதையாய்
விளைந்து பலன் தருவோம் - 2
விளைந்து பலன் தருவோம் - திறப்பில் நின்றிட
- Bro. T. Ebenezer Christopher
Comments
Post a Comment