பரனே உனை நம்பினேன் உரமுடன் தாங்கையா
229. இராகம்: செஞ்சுருட்டி ஏகதாளம்
பல்லவி
பரனே, உனை நம்பினேன்;
உரமுடன்[1] தாங்கையா
சரணங்கள்
1. அருள் தருவாயே;
அகம் வருவாயே;
திரிவினை தீர்த்து
விடுவாயே; ஓகோ! - பரனே
2. மானில மீது வரும்
பலன் ஏது?
வானில் எனைச்
சேர்த்திடு வாயே; ஓகோ! - பரனே
3. அலகையை[2] ஜெயித்தாய், அதின் திறம் அழித்தாய்;
உலக அழுக்கனைத்தும்
துடைத்தாய்; ஓகோ! - பரனே
4. பாவிகட்காக, பரனே,
நீ சாக
பூ உலகில் வந்ததற்காக,
ஓகோ; - பரனே
5. தீயர்கள் உய்யத் தேவரீர் செய்ய
மாய உலகில்வந்து
மாண்டாய், ஓகோ! - பரனே
6. விசுவாசம் தரவும், விசும்பில்[3] யான்
வரவும்
அசுசி அகற்றவும், அடியேனே ஓகோ! - பரனே
- ஜாண் பால்மர்
Comments
Post a Comment