அமுதிலும் இனிய ஆண்டவரே
அமுதிலும்
இனிய ஆண்டவரே
எந்த
பொழுதிலும் உம்மை ஆராதிப்பேன்
கடலிலும் பெரிய அன்பு வைத்து
உந்தன் காருண்யத்தால் என்னை இழுத்தவரே
ஆராதனை உமக்கு ஆராதனை
1. இருப்பவராய் எம்மில் இருப்பவரே
எம் இதயத்தை முற்றிலும் கவர்ந்தவரே
கூப்பிடும் வேளை செவிதனை சாய்த்து
வேண்டிய உதவிகள் செய்பவரே
2. உள்ளத்தில் வாசம் செய்பவரே
என் உயிரினும் இனிய சகோதரரே
சொன்னதை நீரே செய்பவரே
உம் சொந்தமாய் என்னை தெரிந்தவரே
3. கண் கண்ட தெய்வம் நீர்தானே
கடவுளின் மைந்தன் நீர்தானே
ஊற்றுண்ட பரிமள தைலமும் நீரே
உன்னத தேவனும் நீர்தானே
Comments
Post a Comment