காகளம் தொனிக்க சுத்தர் மாறிடுவார்
காகளம்
தொனிக்க சுத்தர் மாறிடுவார்
கர்த்தர் இயேசுவுடன் நிதம்
வாழ்வோம்
துக்கங்கள் ஒழிய துயர் நீங்கிடுமே
அன்பர் இயேசுவுடன் நிதம்
வாழ்வோம்
இயேசுவே இயேசுவே இராஜனே இராஜனே
எந்தன் ஆவலை தீர நீர் வாரும்
சுத்தரோடு சேர்ந்து
மறுரூபம் அடைந்தே
பரனோடு நிதம்
வாழுவேன் - 2
1. எண்ணில்லாப் பக்தர்கள் சூழ தூதருடன்
எந்தன் இயேசுவை காண்பேன் அந்நாளில்
ஆனந்தம் பொங்கவே அன்பர் தேசமதில்
ஆவலாய் நானும் அவருடன் சேர்வேன் - இயேசுவே
2. சீயோனின் மணாளா மகிமை இராஜனே
எந்தன் வாஞ்சைகள்
தீர நீர் வாரும்
மகிமை தேசத்தில் மன மகிழ்வுடனே
என்னை சேர்த்திட விரைந்து நீர் வாரும்
- இயேசுவே
YouTube Link
Comments
Post a Comment