பரலோக சந்தோஷம் பாரினில் வந்து
பரலோக
சந்தோஷம் பாரினில் வந்து
என்னை
பரவசப் படுத்துகிறதே
பரமபிதா
நீர் என்னை தந்தை
பாவி நான் உந்தன் பிள்ளை
(ஆமென்)
1. புத்திர சுவிகார
ஆவியினால்
நீர் என்னை பிரித்தெடுத்தீர்
புரியாத உணர்வாலே
என்னை தேற்றுவீர்
அது உன்னத பெலன் அல்லவா
2. என் பிரிய இயேசு என் இனிய நேசர்
என்னோடு இருப்பார் என்றும்
ஜீவ ஒளியாக
எந்தன் இருள் வாழ்வில்
வந்தார் தெய்வீகமான அன்பே
3. பரலோகம் எனக்குள் உருவாகுதே
இங்கே
அந்த பரமனைக்
கண்டு கொண்டேன்
அவர் திருவாய்
மொழி எனக்கு அருமருந்தாகுமே
தினமும் பலகோடி
துதி பாடுவேன்
Comments
Post a Comment