பயப்படாதே சிறு மந்தையே
பயப்படாதே
சிறு மந்தையே
பரலோக இராஜ்ஜியம் உனக்குள்ளதே
தேடுங்கள் தேவனின் இராஜ்ஜியத்தை
கூட யாவும் கொடுப்பாரே
1. புசிப்பும் அல்ல குடிப்பும் அல்ல
தேவனின் இராஜ்ஜியமே
நீதி சமாதானம் நித்திய சந்தோஷம்
நிர்மலன் ஆவியாலே
2. ஐசுவரியமுள்ளோர்
அடைவது அரிது
ஆண்டவர் இராஜ்ஜியத்தில்
ஆசையெல்லாம்
தியாகம் செய்தோர்
ஆளுவார் இயேசுவோடு
3. கர்த்தாவே என்றும் கனியற்ற மனிதன்
கானான் இராஜ்ஜியத்தை
பிதாவின் சித்தம் நித்தம் செய்தால்
சேரலாம் இராஜ்ஜியத்தில்
YouTube Link
Comments
Post a Comment