மீட்டெடுக்கப்பட்ட கூட்டமே விரைந்து செயல்படு

மீட்டெடுக்கப்பட்ட கூட்டமே விரைந்து செயல்படு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

            மீட்டெடுக்கப்பட்ட கூட்டமே - விரைந்து செயல்படு

            மீட்பர் இயேசு வேலை செய்ய - விரைந்து புறப்படு - 2

 

                        நாட்கள் மிக விரையுதே நாற்று நன்றாய் வளருதே - 2

                        ஆட்கள் வேண்டும் அறுவடைக்கு, ஆம் அதிகம் பெருகுதே - 2

 

1.         தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் நாம் - உலகமெங்கிலும்

            அனுப்பிவைக்கப்பட்டவர்கள் நாம் - உலக முழுவதும் - 2

            தேசங்கள் நம் சொந்தமாம் ஜாதிகள் நம் சுதந்திரம் - 2

            நேசர் இயேசு அரசாங்கம், அமைந்திடுமே சீக்கிரம் - 2 - மீட்டெடுக்கப்பட்ட

 

2.         காலங்களை உணர்ந்திடுவோம் - கர்த்தரின் பணியிலே

            கருத்துடனே செயல்புரிவோம் ஜனங்கள் மத்தியிலே - 2

            ஞாலமெல்லாம் மீட்கவே, இயேசு நாமம் கேட்கவே - 2

            தீவிரமாய் செயல்படுவோம், தீங்குவோரை நேசிப்போம் - 2 - மீட்டெடுக்கப்பட்ட

 

3.         பாரதத்தின் மாநிலம் எல்லாம் - பரமன் ஆட்சியாய்

            பரவிடவே பாடுபடுவோம் இரத்த சாட்சியாய் - 2

            வாருங்கள் என்றழைக்கிறார் வாஞ்சையோடு சென்றிடுவோம் - 2

            வாழ்க்கைதனை அர்ப்பணிப்போம் அறுவடைக்கு சென்றிடுவோம் - 2 - மீட்டெடுக்கப்பட்ட

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு

கிறிஸ்தவ கீர்த்தனைகள்