பரனாவியே அன்பின் ஆவியே
பரனாவியே அன்பின் ஆவியே
நித்தம்
எந்நாளும் என்னோடு வாழ்பவரே
பலமாக என்னை நிரப்பும்
ஊற்றுமைய்யா ஊற்றுமைய்யா
பாத்திரம் நிரம்ப ஊற்றுமைய்யா
பரிசுத்தமடைய ஊற்றுமைய்யா
1. மாம்சத்தின் தீய
செயல் சுட்டெரிக்க
வானத்து அக்கினியே
வந்திரங்கும்
எலியாவின் தேவனே இறங்கியே வாருமே
2. ஆவிக்குள்ளாகி
உம்மில் ஆனந்திக்க
வேதத்தின் ஆழம் கண்டு சந்தோஷிக்க
அநுக்கிரகம்
வேண்டுமே அபிஷேகம் தாருமே
3. வல்லமை வரங்களை அள்ளித் தாரும்
வானத்தை நோக்குதய்யா
எந்தன் உள்ளம்
எழுப்புதல் வேண்டுமே எனக்கின்று தாருமே
Comments
Post a Comment