விழித்தெழும்பி வேகம் செல்லுவோம் சபையோரே
விழித்தெழும்பி வேகம் செல்லுவோம்
சபையோரே
இதோ மணாளன் இயேசு வருகிறார்.
1. இராக்காலமும் சொல்லுதே பகல் சமீபம் ஆகுதே
இருளின் கிரியை யாவையும் அகற்றுவோம்
ஒளியின் ஆயுதங்களை தரித்து வீரமாய்
ஓயாமல் போர் புரிந்து சேருவோம்.
2 தேசம் பாஷை ஜாதிகள் ஓன்றோடுஒண்டெதிற்குதே
தெய்வ அன்பும் நம்பிக்கை தணியுதே
ஜீவ வசனத்தை மேலே உயர்த்தி கொண்டே
ஜோதிகளாய் பூவில் துளங்குவோம்.
3. உரைத்த அவர் வார்த்தைகள் யாவும் நிறைவேறுதே
யூதரும் தம் நாட்டை மீண்டும் பெறவே
சீயோனின் வேலையும் சீக்கிரம் முடியுதே
சீராய் நேராய் நடந்து செல்வோம்.
4. தலைகளை உயர்த்துவோம் நம் ரட்சிப்பு நெருங்குதே
நிலையான நகரம் வேறிங்கில்லையே
நித்திய கன மகிமைக் கிணையாகுமோ
இக்கால பாடு துன்பம் யாவுமே.
5. சற்று நேர ஜீவியம் கழித்திடும் கூடாரமே
உற்றதோர்கை வேலையற்ற வீடங்கே
ஏகமாய் புது பெலன் தரித்து தீரமாய்
சோராது ஜீவன் வைத்து வாருமே.
Comments
Post a Comment