பரம அழைப்புக்கு பங்குள்ள பாத்திரமே
பரம அழைப்புக்கு
பங்குள்ள பாத்திரமே
பரமன்
இயேசுவையே நோக்கி ஓடுவாயே
வசனம் வழிகாட்ட கிருபை காத்துக் கொள்ள
பதறாமல் ஓடுவாயே
ஆ... அல்லேலூயா ஓ... ஓசன்னா
மகிமை மகிழ்ச்சியே ஜெயமே கிறிஸ்துவிலே
1. வாழ்க்கையில் உன்னோடு
கூடவே வந்திடுவார்
ஓட்டம் ஜெயத்துடன்
ஓடி முடித்திட
வல்லமை ஈந்திடுவார்
2. வெள்ளம் போல் நிந்தைகள் வந்தாலும்
கடலை அதட்டி
காற்றை அமர்த்தி
மறுகரை சேர்த்திடுவார்
3. கரடிகள் ஓநாய்கள் சிங்கமே சூழ்ந்தாலும்
கோலோடு தடியும்
என்னை தேற்றிடும்
நல் மேய்ப்பர் எனக்கு உண்டு
Comments
Post a Comment