அதிசயங்களை எண்ணி பாடவா
காற்றும் உம் பேச்சைக் கேட்கும்
கடலும்
வழி விலகி நிற்கும் - 2
கோரப்
புயல் கூட நீர் எழுந்து நிற்க
தென்றலாகி
விடுமே
ஆழி சீற்றங்கள் மீண்டும் எழுவதற்கு
துணிவை இழந்து விடுமே
வானம் மகிழ்ந்து பாடும்
மலைகள் நடனமாடும்
விருட்சம் கைகள் தட்டும்
துதித்திடும் உம்மை
அதிசயங்களை எண்ணி பாடவா
அதிசயம் நீர்தானே மன்னவா - 2
திசையெட்டும்
தொனிக்கும்
இசைவழி உம்
துதி - 2
நீர் தந்த மூச்சினை
துதியாய் உமக்கே
திருப்பித் தருகிறேன்
முழுதோனே
முழுதோனே
முழுதோனே
முழுதோனே
நன்றி சொல்லிட வார்த்தை இல்லையால்
கண்ணீரை நன்றியாக்கினேன் - அதிசயங்களை
1. பூர்வத்தில் எனைத்தெரிந்த
ஊழியான் நீயே
கரங்களில் எனை
வரைந்த அழியான் நீயே - 2
முன்னோன் நீயே முதல்வனும் நீயே - 2
நம்பன் உன்னை
நம்பின யாரையும் பகுதி விட்டதில்லை - முழுதோனே
2. நன்மை செய்திடும் நல்லான் நீயே
நலன்களைப் பொழிந்திடும் எம்பெருமானே -
2
மெய்யான் நீயே அலங்கடை
நீயே - 2
இத்தனை கோடியில் ஈடில்லாமல் தனித்து நிற்கும்
எங்கள் - முழுதோனே
- PAS. JOHN JEBARAJ
Comments
Post a Comment