பயணிகள் பாதையில் பலம் தரும் விருந்து
பயணிகள் பாதையில்
பலம்
தரும் விருந்து
பரமனின்
திருவுளம்
பார்த்திடும்
விருந்து
1. படைப்பதின் அழகு,
படைத்தவர்
பரிவு
பணிந்துமே நன்றிப்
படைத்திடும்
விருந்து
அடிமைகள்
உடன் வந்து
விடுதலை
அருளும்
ஆண்டவர்
அருள்
நினைவாகிடும் விருந்து
2. இறைவனின்
அரசதின்
முன்சுவை இங்கு
இயேசுவின்
அடியவர்
இணைவதில்
தங்கும்
குறைகளை
மறக்கும்
குருவருள் பலிக்கும்
குறையிலா முழுமைக்கு
வாழ்வது
பிறக்கும்
3. ஈவதும் ஏற்பதும்
விருந்ததில் பொதுமை
இறைவனே
தனை
இதில்
ஈவது புதுமை
ஈவதால் என்றும்
மறைவது
வெறுமை
சாவிலே வாழ்வது
மலர்வதே இனிமை
- அருட்திரு. எஸ். இஸ்ரவேல் செல்வநாயகம்
YouTube Link
Comments
Post a Comment