பரம பிதாவை துதித்திடுவோம்
பரம பிதாவை
துதித்திடுவோம்
இரட்சகர் இயேசுவை துதித்திடுவோம்
பரிசுத்த ஆவியை துதித்திடுவோம்
திரியேக தேவனை
துதித்திடுவோம்
துதிப்போம் அல்லேலூயா - 4
இரட்சகர் இயேசுவின் நாமத்தை
உயர்த்தி
1. செங்கடல் முன்னே சீறினாலும்
பார்வோனின் சேனைகள் தொடர்ந்தாலும்
சத்துரு வெள்ளம் போல் சூழ்ந்தாலும்
கர்த்தரோ ஜெயக்கொடி
ஏற்றிடுவார்
2. ஆறுகளை நீ கடக்கும் போது
அற்புத தேவன் உன் உடன் வருவார்
அக்கினியில்
நீ நடக்கும் போது
வெந்து மடிந்து போவதில்லை
3. ஆயிரம் ஆயுதங்கள் எதிர்த்தாலும்
அத்தனையும் இனி வாய்த்திடாதே
அற்புதர் உன் பக்கம் இருக்கும் போது
எதிர்பவர் யார்
உன்னை வெல்பவர் யார்
Comments
Post a Comment