06 February 2025

அமலா தயாபரா அருள்கூர் ஐயா

ஞா.கீ:33

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

33. இராகம்: ரீதிகௌள                                            ஆதிதாளம்

 

                             பல்லவி

 

          அமலா[1], தயாபரா, அருள்கூர், ஐயா, குருபர[2]

 

                             சரணங்கள்

 

1.         சமயம் ஈராறோர் ஆறு சாஸ்திரங்கள் வேத நான்கும்

            அமையும் தத்துவம் தொண்ணூற் றாறும், ஆறுங்கடந்த - அம

           

2.         அந்தம் அடி[3] நடு இல்லாத தற்பரன் ஆதி,

            சுந்தரம் மிகும் அதீத[4] சோதிப்பிரகாச நீதி. - அம

 

3.         ஞானத் ரவிய வேத நன்மைப் பரம போத,

            வானத் தேவப்ரசாத[5] மகிமைக் களவில்லாத. - அம

 

3.         காணப்படா அரூப, கருணைச் சுய சொரூப,

            தோணப்படா வியாப[6], சுகிர்தத்[7] திருத் தயாப. - அம

 

4.         சத்ய வசன நேயா, சமஸ்த புண்ய சகாயா,

            கர்த் தத்துவ உபாயா, கருணை பொழியும் வாயா - அம

 

5.         எல்லை இல்லா மெய்ஞ் ஞான ஏக பர வஸ்தான

            சொல் அரிதாம் நிதான, துல்லிபத்[8] தொன்றாம் மேலான - அம

 

6.         கருணாகரா, உப காரா, நிராகரா,[9]

            பரமேசுரா, கிரு பாகரா, சர்வேசுரா - அம

 

 

- வே.சா

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு



[1] தூயவர்

[2] முதல் ஆசான்

[3] ஆதி

[4] மனதுக்கு எட்டாத

[5] ஜீவஅப்பமாகிய கிறிஸ்து

[6] நிறைந்த

[7] நற்செயல்

[9] உருவமற்றவனே

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...