பரலோகம் திறக்கட்டும் பரிசுத்தர் பாதத்தில்
பரலோகம்
திறக்கட்டும் பரிசுத்தர் பாதத்தில்
புறப்படும் ஜீவத்தண்ணீர்
நம்மை மகிழ்ச்சி ஆக்கட்டும் (2)
நான் பாடிப் பாடி
மகிழ்வேன் -
ஆடி ஆடித் துதிப்பேன் - 2
அணை கட்ட முடியாத
அன்பரின் அன்பிலே
1. தூதரோடு பாடுவேன்
சேனையோடு
மகிழ்வேன் (2)
பரலோக பாஷை
பேசியே
தேவாதி தேவனை ஆராதிப்பேனே
2. நடனமாடிப் புகழ்வேன்
மகிழ்ச்சியோடு தேடுவேன் (2)
சர்வ சங்க சபைதனிலே
பரிசுத்தவான்களோடு
ஆராதிப்பேனே
3. சிருஷ்டிகரைப்
பணிவேன்
ஸ்தோத்திரம் செலுத்தித்
துதிப்பேன் (2)
சேராபீன்களோடு
சேர்ந்து
மகிமை, கனம் செலுத்தி ஆராதிப்பேனே
4. இரட்சகரைப்
போற்றுவேன்
நாயகரை வாழ்த்துவேன் (2)
சிங்காசனத்தின்
தேவனை
தூத
மகிமையோடு ஆராதிப்பேனே
Comments
Post a Comment