பரலோக தந்தையே பரலோக தந்தையே

பரலோக தந்தையே பரலோக தந்தையே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                    பரலோக தந்தையே பரலோக தந்தையே

                        பரிசுத்த தெய்வம் நீரே

                        பலகோடி தேவர்களில் உயர்ந்தவர்

                        உன்னதர் பரிசுத்த தெய்வம் நீரே

                        பூமிக்கெல்லாம் ஆண்டவரும் நீரே      

                        பரலோகத்தில் உயர்ந்தவர் நீரே

                        ஒருமனதோடு கூடி வந்தோம்

                        உன்னத தேவனை தொழுதிடவே

                        ஓயாத புகழ்ச்சி ஓயாத கனமும்

                        நிறைந்த என் தேவனை தொழுதிடவே வந்தோம்

 

1.         அப்பத்தைக் கேட்டா கல்லை கொடுப்பானா

            மீனைக் கேட்டா பாம்பைக் கொடுப்பானா

            முட்டையை கேட்டா தேளைக் கொடுப்பானா

            பொல்லாத தகப்பனே

            நல்ல ஈவை அறியும் போது

            இம்மைக்கும் மறுமைக்கும்

            பரமத் தகப்பன் நீர் தானே

 

2.         பறந்து காக்கும் பட்சியைப் போலே

            தேவன் தினமும் சுமந்திடுவாரே

            தகப்பன் பிள்ளையை சுமப்பது போலே

            தேவன் தினமும் சுமந்திடுவாரே

            தாயைப் போல் தேற்றுவார்

            தகப்பனைப் போல் சுமந்திடுவார்

 

3.         புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவாரே

            அமர்ந்தத் தண்ணீரண்டை நடத்திடுவாரே

            கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்ற போது

            தாழ்ச்சி என்பது வாழ்வினில் இனி இல்லை

            நன்மையும் கிருபையும்

            வாழ்நாளெல்லாம் தொடரச் செய்வார்

 

 

Pastor. Lucas Sekar

 

 

YouTube Link
YouTube Link
YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே