பரிசுத்த ஆவி என்னோடிருக்கிறார்
பரிசுத்த
ஆவி என்னோடிருக்கிறார்
இருக்கிறார்...
இருக்கிறார்....
ஜீவத்தண்ணீர்
என்னிலே
பொங்கிப் பொங்கி வழியுதே
பொங்கிப்பொங்கி
பொங்கிப்பொங்கி வழியுதே
வழியுதே... வழியுதே...
1. ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவி
ஆலோசனையும் பெலனும் அருளும் ஆவி
அறிவையும் கர்த்தருக்குப்
பயப்படும்
பயத்தையும் அருளும் ஆவி
என்னோடிருக்கிறார்
(2) - பரிசுத்த
2. ஏழைக்கு சுவிசேஷம்
சொல்லிடும் ஆவி
அபிஷேகம்
பண்ணி என்னை ஆட்கொண்ட ஆவி (2)
இருதயம் நருங்குண்டு
சிறைப்பட்ட மக்களை
விடுவிக்கும் ஆவி என்னோடிருக்கிறார்
3. நொறுங்குண்ட
மக்களை குணமாக்கும் ஆவி
குருடரின்
கண்களை திறந்திடும் ஆவி (2)
தாகமுள்ள மக்களுக்காய் வாக்களிக்கப்பட்ட ஆவி
தேற்றரவின்
ஆவி என்னோடிருக்கிறார்
4. உலகம் கண்டிராத சத்திய ஆவி
நமக்குள்ளே வாசம் பண்ணி ஜெயம் தரும்
ஆவி
சத்திய வசனத்தை கருத்தாய் போதிக்கும்
பிதாவின் ஆவி என்னோடிருக்கிறார்
Comments
Post a Comment