அம்மா நான் என்ன செய்வேன் நீர்தான்
197.
“பாவி நான் என்ன செய்வேன் அழல் பற்றி” என்ற மெட்டு
அம்மா
நான் என்ன செய்வேன் நீர்தான்
அழ
வேண்டாம் அங்கம் பதறி - அம்மா
1. உகந்த யோவான் உம் மகன் நான்
உள்ளன்பால்
சம்பாதித்தேன்
மகிழ்ந்தும்மை
ஆதரிப்பான் - அம்மா
2. தந்தை தாய் பேணிடுவோர்
மண்ணில்
தக்க மறை சொற்படி
சந்ததம் வாழ்த்திடுவார் - அம்மா
3. என்னுடை இராச்சியமோ அது
இகத்திற்குரியதில்லை
மண்ணாள வந்தேனல்லேன் - அம்மா
4. பரனைவிட எதையும்
அதிகமாய்ப்
பாரில் நேசிப்பவர்கள்
பரத்துக்கு
பாத்திரர் அவ்லர் - அம்மா
5. உலகம் பாராட்டுமந்த
மாபெரும்
உரித்தான இரத்த
பாசம்
பலனற்ற பாழ் நேசமாம்
- அம்மா
6. கிறிஸ்துவுக்குள்
எல்லாரும் எங்கும்
சகோதர சகோதரிகள்
விரித்தேன்
மெய் யன்பிதுதான் - அம்மா
7. என் பிதா சித்தப்படி
- எங்கும்
எப்போதும் நடப்பவர்கள்
என் தாய் சகோதரரே - அம்மா
- S. ஞானசிகாமணி, அத்திகுளம்.
Comments
Post a Comment