பரலோக கார்மேகமே பரிசுத்த

பரலோக கார்மேகமே பரிசுத்த

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          பரலோக கார்மேகமே

            பரிசுத்த மெய் தீபமே

            உயிராய் வந்தீரைய்யா

            உணர்வே நீர்தானைய்யா - என்

 

                        ஆவியானவரே என் ஆற்றலானவரே - பரலோக

 

1.         அறிவு புகட்டுகின்ற

            நல் ஆவியாய் வந்தீரே

            இறுதிவரை என்றென்றைக்கும்

            எனக்குள்ளே வாழ்பவரே - ஆவியானவரே

2.         மேன்மையாய் உயர்த்தினீரே

            இன்பமாய் பாடுகிறேன்

            இறைவாக்கு என் நாவிலே

            என் வழியாய் பேசுகிறீர் - ஆவியானவரே

 

3.         மறுரூப மலை நீரே

            மகிமையின் சிகரம் நீரே

            உருமாற்றம் அடைக்கின்றேன்

            உம்மேக நிழல்தனிலே - ஆவியானவரே

 

4.         விண்ணக பனித்துளியாய்

            மண்ணகம் வந்தீரே

            புதிதாக்கும் பரிசுத்தரே

            உருவாக்கும் உன்னதரே - ஆவியானவரே

 

5.         தகப்பனை அறிந்துக்கொள்ள

            வெளிப்பாடு தருகின்றீர்

            அவர் விருப்பம் நிறைவேற்ற

            ஞானம் தந்து நடத்துகின்றீர் - ஆவியானவரே

 

6.         அக்கினி ஸ்தம்பமாக

            மேக நிழலாக

            தவறாமல் நடத்துகிறீர்

            விலகாமல் முன் செல்கிறீர் - ஆவியானவரே

 

7.         அப்பா பிதாவே என்று

            கூப்பிடச் செய்தீரே

            பிள்ளையானேன் உம் பிரசன்னத்தால்

            பெலனடைந்தேன் உம் வரவால் - ஆவியானவரே

 

 

- Fr. S.J. Berchmans

 

 

YouTube Link
YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே