பெத்தலகேம் ஊரினிலே நம்ம சாமி பொறந்தாரு
பெத்தலகேம் ஊரினிலே நம்ம சாமி பொறந்தாரு
உலகமெல்லாம்
மகிழ்ந்திடதான்
ஏழையாக பிறந்தாரு
எல்லோரும் பாடுங்க கைத்தாளம்
போடுங்க
பெத்தலையில் இயேசு சாமி பிறந்தாருங்க
ஆனந்தமாய் பாடுவோம் ஆர்ப்பரித்து
ஆடுவோம்
நம்ம
இயேசு மனுசனாக பிறந்தாருங்க
1. சத்திரத்தில் இடமும் இல்ல
மாட்டுக்குடில்
தானிருக்கு
கந்தை துணியில் பொதிந்திருக்கும்
கோலம் பாருங்க - 2
கந்தை துணியில் பொதிந்திருக்கும்
கோலம் பாருங்க - எல்லோரும்
2. தூதர் எல்லாம் பாடினர்
மேய்ப்பர் எல்லாம் தொழுதனர்
கிழக்கு நாட்டு ஞானிகளும் வணங்கி நின்றனர்
- 2
கிழக்கு நாட்டு ஞானிகளும் வணங்கி நின்றனர்
- எல்லோரும்
3. எல்லாருக்கும்
நல்ல செய்தி
சந்தோசமாம்
நல்ல செய்தி
நம்ம சாமி நம்ம போல பிறந்தாருங்க - 2
நம்ம சாமி நம்ம போல பிறந்தாருங்க - எல்லோரும்
4. ஏழைகளாம் நம்மையும்தான்
அன்பாலே நேசிச்சி
ஏழை கோலம் எடுக்க இங்கே வந்தாருங்க - 2
ஏழை கோலம் எடுக்க இங்கே வந்தாருங்க - எல்லோரும்
5. நாற்றமெல்லாம் சகிச்சித்தான்
தொழுவத்தில
பிறந்தாரு
நம்மையெல்லாம் பரலோகம் கொண்டுபோகத்தான் - 2
நம்மையெல்லாம் பரலோகம் கொண்டுபோகத்தான் - எல்லோரும்
- Rev. Dr. S. Jayalal
Comments
Post a Comment