பயத்தோடும் நடுக்கத்தோடும் கர்த்தாவே
பயத்தோடும் நடுக்கத்தோடும்
கர்த்தாவே நான் ஜெபிக்கணுமே - 2
உம் பாதத்தில் நான் ஜெபிக்கும்
போது
அபிஷேகம்
இறங்கணுமே - 2
1. சர்வ சிருஷ்டிகரே
என்னைப் படைத்தவர் நீர்தானையா -2
நீர் இல்லா என் வாழ்விலே
நிம்மதியில்லையையா
- 2 - பயத்தோடும்
2. ஒளியாய் வந்தவரே
எந்தன் உள்ளத்தில் வாருமையா - 2
இந்த உலகின் சுடரொளியாய்
என் வாழ்வை மாற்றுமையா
- 2- பயத்தோடும்
3. சத்திய தேவாவியே
உந்தன் பாதையில் நடத்துமைய்யா
- 2
தேற்றரவாளன் நீரே
தேற்றிட வாருமையா
- 2 - பயத்தோடும்
- Pr. Chandra Sekaran
YouTube Link
Comments
Post a Comment