பணிந்து பாடி போற்றுவோம்
பணிந்து பாடி போற்றுவோம்
கனிந்த ஆவி உண்மையோடு
எம் தேவனை - ஆ...ஆ ...ஆ
1. மோசையை விடப் பெரியவர்
பிரமாணங்களை நிறைவேற்றினவர்
- 2
வேஷங்கள் யாவையும் வெறுப்பவர்
பாசமாய்த் தொழுதிடுவோம் -
பணிந்து
2. ஆரோனை விடப் பெரியவர்
சதா மாறாத ஆசாரியர் - 2
வாரேனென்று கூறினவர்
நேரே நாம் தொழுதிடுவோம் - பணிந்து
3. ஆலயத்தை விடப் பெரியவர்
இங்கு ஆலயமாக இருந்தவர் - 2
ஆலயம் நீங்களே என்றவர்
அலங்காரமாய் தொழுதிடுவோம் - பணிந்து
4. யோனாவை விடப் பெரியவர்
கெட்டுப் போனோர்களுக்கும் உரியவர்
- 2
தாமாக ஜீவன் தந்தவர்
கோணாமல் தொழுதிடுவோம் - பணிந்து
5. சாலொமோனை விடப் பெரியவர்
தேவஞானமென்ற பெயர்க்குரியவர் - 2
காலமெல்லாம் கூட இருப்பவர்
தாராளமாய்த் தொழுதிடுவோம்
- பணிந்து
6. எல்லாரிலும் மேலானவர்
நமக்கெல்லாமுமாக உள்ளவர்
- 2
அல்லேலூயாவுக் கருகர்
வல்லமையாய்த் தொழுதிடுவோம் - பணிந்து
YouTube Link
Comments
Post a Comment