பரனேசு புகழ் பாடுவோம்

பரனேசு புகழ் பாடுவோம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   பரனேசு புகழ் பாடுவோம் - 2

                        கிறிஸ்து ஆலய பண்டிகை

                        நாளினில் நாமெல்லாம் - பரனேசு

                        ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆஆ... ஆ

 

1.         சேகர தோத்திரப் பண்டிகையை

            எங்கள் சபை இன்று காணச் செய்தாய் - 2

            பொங்கும் மகிழ்ச்சியாம் நன்னாளிலே - 2

            சபையோராய் எல்லாரும் கூடச் செய்தாய் - 2

            இறைவா உம் அருள்மாரிப் பொழிவாய் எம் சபை மீதில் - பரனேசு

 

2.         தென்னிந்தியத் திருச்சபை தனிலே

            திருநெல்வேலித் திருமண்டிலத்தில்

            டக்கரம்மாள் புரம் ஆயர் முன்னிலையில்

            இயேசு கிறிஸ்து நம் ஆலயத்தில்

            கொண்டாடும் தோத்திரப்

            பண்டிகை தினமதில் - பரனேசு

 

3.         எருசலேம் கண்ட ஓர் பண்டிகை போல்

            எங்கள் சேகரம் இன்றும் காணச் செய்தாய்

            பற்பல நேர்ச்சைப் பொருட்களுடன்

            பாடியே பந்தலில் படைத்திடவே

            அருள்வாய் உன் கிருபையை

            பொழிவாய் உன் மகிமையை - பரனேசு

 

4.         பாடகர் நாவில் நல் துதியுமானாய்

            பாடியே மகிழ்ந்திட கீதமானாய்

            ஆண்டாண்டாய்க் காத்திடும் கர்த்தனானாய்   

            ஆனந்தப் பண்டிகை பொருளுமானாய்

            இணையட்டும் இதனோடே

            இன்னும் பல குடும்பமும் - பரனேசு

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே