பரிசுத்த ஆவியே பக்தர்கள் துணையாளரே

பரிசுத்த ஆவியே பக்தர்கள் துணையாளரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                    பரிசுத்த ஆவியே பக்தர்கள் துணையாளரே

                        கூட இருப்பவரே குறைகள் தீர்ப்பவரே - 2

1.         தேற்றிடும் தெய்வமே

            திடம் தருபவரே - 2

            ஊற்றுத் தண்ணீரே - 2

            உள்ளத்தின் ஆறதலே - எங்கள்

            உள்ளத்தின் ஆறதலே - பரிசுத்த ஆவியே

2.         பயங்கள் நீக்கிவிட்டீர்

            பாவங்கள் போக்கிவிட்டீர் - 2

            ஜெயமே உம் வரவால் - 2

            ஜெபமே உம் தயவால் - தினம்
            ஜெபமே உம் தயவால் - பரிசுத்த ஆவியே

3.         அபிஷேக நாதரே

            அச்சாரமானவரே - 2

            மீட்பின் நாளுக்கென்று - 2

            முத்திரையானவரே - எங்கள்
            முத்திரையானவரே - பரிசுத்த ஆவியே

4.         விடுதலை தருபவரே

            விண்ணப்பம் செய்பவரே - 2

            சாட்சியாய் நிறுத்துகிறீர் - 2

            சத்தியம் போதிக்கிறீர் - தினம்

            சத்தியம் போதிக்கிறீர் - பரிசுத்த ஆவியே

5.         அயல்மொழி பேசுகிறோம்

            அதிசயம் காண்கிறோம் - 2

            வரங்கள் பெறுகிறோம் - 2

            வளமாய் வாழ்கிறோம் - நாங்கள்
            வளமாய் வாழ்கிறோம் - பரிசுத்த ஆவியே

6.         சத்துரு வரும் போது

            எதிராய் கொடி பிடிப்பீர் - 2

            எக்காளம் ஊதுகிறோம் - 2

            எதிரியை வென்று விட்டோம் - நாங்கள்

            எதிரியை வென்று விட்டோம் - பரிசுத்த ஆவியே

 

 

- பெர்க்மான்ஸ்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே