பயப்படாதே பயப்படாதே கர்த்தர் நம்முடனே
பயப்படாதே
பயப்படாதே கர்த்தர் நம்முடனே
கலங்கிடாதே
கலங்கிடாதே மீட்பர் நம்முடனே
வெற்றியுண்டு தோல்வி இல்லை
கர்த்தர் நம்முடனே மீட்பர்
நம்முடனே
1. வனாந்திர பாதையிலே
ஆகார் அழுகுரல் கேட்டாரே
நீர் என்னைக் காண்கிற தேவன் என்று
பெயரிட்டு மகிழ்ந்தாளே
- வெற்றி
2. உனக்கெதிரான ஆயுதங்கள்
வாய்காதே போகும்
யாக்கோபுக்
கெதிரே மந்திரம் இல்லை
இஸ்ரவேலுக்கெதிரே
குறி சொல்லுதலில்லை
- வெற்றி
3. அவர் உங்களை விசாரிக்க
பாரத்தை வைத்துவிடு
நீதிமானை அவர் தள்ளுவதில்லை
காக்கும் தேவன் அவர் தூங்குவதில்லை
Comments
Post a Comment