20 November 2024

என்னை ஒப்புவித்தேன் நின்னடி வந்தேன்

பாடல்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

                             பல்லவி

 

என்னை ஒப்புவித்தேன் நின்னடி வந்தேன்

இறைவா உந்தன் அருளையே நாடுவேன்

 

                             அனுபல்லவி

 

கொல்கோதாவில் என்னை சிலுவையிலே

இயேசுவே நீர் மன்னித்தீர் கிருபையின் தயாளனே

 

                             சரணங்கள்

 

1.         என்னை இரட்சிக்கவே சுமந்தீர் நிந்தைகள்

            இயேசுவே நீர் என் பாவங்கள் ஏற்றீர்

            கல்வாரியில் இரத்தம் வழிந்தோடவே

            மரித்தீரே நீர் எனக்காய் கருணையின் மறைவிடமே

 

2.         உம்மைப்போல் தூயனாய் நானென்றும் வாழ்ந்திட

            அர்ப்பணம் செய்தேன் உம் ஆவி ஆட்கொள்ள

            படைத்தேனே என்னை உம் பலிபீடத்தில்

            மகிழ்வோடு நாடுவேன் பணிவேன் உம் பாதமொன்றே

 

 

- Mallika Duraipandian and Uma Chellappa, daughters of Kalaimamani D. A. Thanapandian

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...