என்னை உயர்த்தி மகிழும் தெய்வம் நீரே
என்னை உயர்த்தி மகிழும் தெய்வம் நீரே
என்னை வாழ வைக்கும் தெய்வமும் நீரே
குறைவுன்னு
சொல்ல எனக்கு எதுவும் இல்லை - 2
நித்தம் நித்தம் நடத்தி செல்லுகிறீர்
தகப்பன் நீர் நடத்தி செல்லுகிறீர்
1. பாதையெல்லாம் கண்ணீரா
வந்து சேர்ந்தேன் நான் - 2
தகப்பனோ தூர என்னைக் கண்டுகொண்டீரே - 2
என்னை ஓடி வந்து தூக்கி முத்தத்தால் கண்ணீர் துடைத்தீரே
தூக்கி சுமந்த உயிரே உம்மை பாட (இன்னும்)
வரிய தேடுறேன் நான் - 2 - குறைவுன்னு
2. எத்தன நஷ்டம் வந்து விழுந்தாலுமே - 2
அதனையும் இரடிப்பா
திரும்பத் தந்தவரே - 2
என் சாம்பல
கலச்சி கண்ணீரை துடைச்சி தூக்கி
நிறுத்தினீரே
என் தகப்பன் நீங்க கூட இருக்க எனக்கென்ன கவல - 2 - குறைவுன்னு
- Marshal Veda
Comments
Post a Comment