சர்க்கரை முத்தே சந்தன பொட்டே
சர்க்கரை முத்தே சந்தன பொட்டே
கண்ணே கண்ணுறங்கு
முத்தமிழ் சொத்தே முல்லை பூ மொட்டே
கண்ணே கண்ணுறங்கு - 2
அன்னை மரியின் செல்வமே
விண்ணக தேவ திலகமே
கண்ணே நீயும் கண்ணுறங்கு
ஆரிராரிரோ
ஆரிராரிரோ - (2)
1 கந்தையில் நீயும் மகிமை கண்டாய்
கண்ணே கண்ணுறங்கு
தந்தையின் அன்பை எமக்கு தந்தாய்
கண்ணே கண்ணுறங்கு - 2
மந்தையின் ஆயர்கள் தோழமை கொண்டாய்
கண்ணே கண்ணுறங்கு - 2
விந்தையில் வந்து வேந்தர்கள் நின்றார்
கண்ணே கண்ணுறங்கு
ஆரிராரிரோ
ஆரிராரிரோ - (2) - சர்க்கரை
2. விண்ணிலே தூதர் கீதங்கள் கேட்க
கண்ணே கண்ணுறங்கு
மண்ணிலே மாந்தர் நாதங்கள் கேட்க
கண்ணே கண்ணுறங்கு - 2
கண்கவர் விண்மீன்கள் உன் புகழ் காட்ட
கண்ணே கண்ணுறங்கு - 2
தென்றலும் மெல்லிய தேனிசை மீட்ட
கண்ணே கண்ணுறங்கு
ஆரிராரிரோ
ஆரிராரிரோ - (2) - சர்க்கரை
Comments
Post a Comment