09 November 2024

விண்ணக நிலவோ தேவனின் மகவோ

விண்ணக நிலவோ தேவனின் மகவோ

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   விண்ணக நிலவோ தேவனின் மகவோ

                        இப்பூவில் உதித்ததுவோ

                        பனி விழும் இரவில் மழலையின் குரலோ

                        எங்கெங்கும் ஒலித்ததுவோ

 

                        ஒளி தரும் நிலவாய் பூவுலகில் வந்தாரே

                        பவ இருள் போக்க வையம் வந்தாரே

                        மலர்ந்திடும் மலராய் பூவுலகில் வந்தாரே

                        மன இருள் போக்க மண்ணில் வந்தாரே

 

                        தூதரும் பாடிட பாலனாக வந்தாரே

                        ஆயர் மகிழ்ந்திட தேவன் வந்தாரே

                        மழலை உருவிலே மன்னவரும் வந்தாரே

                        மனதின் இருள் நீக்கவே

 

1.         அன்பின் உருவாக வந்ததும் ஏனோ

            பாரில் எனக்காக பிறந்ததும் ஏனோ

            பாதை காட்டி என்னை நடத்திடத் தானோ

            பாவி எனையும் நீர் மீட்டிடத் தானோ

 

                        உயிரின் உறவாய்

                        உலகின் ஒளியாய்

                        என் வாழ்வின் விடி வெள்ளியாய்

                        அகிலம் அழகாகவே பிறந்தீரே

                        அன்பின் உருவாகவே பிறந்தீரே - விண்ணக

 

2.         ஆதியும் அந்தமும் ஆனவர் நீரே

            ஆயுள் வரை எம்மைக் காப்பவர் நீரே

            அல்பா ஓமேகாவும் ஆனவர் நீரே

            அன்னை போல் என்னை அணைப்பவர் நீரே

 

                        உயிரின் உறவாய்

                        உலகின் ஒளியாய்

                        என் வாழ்வின் விடி வெள்ளியாய்

                        அகிலம் அழகாகவே பிறந்தீரே

                        அன்பின் உருவாகவே பிறந்தீரே - விண்ணக

 

 

- Mrs. Suganthy Annibai

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...