அன்னை மரியின் சின்ன மடி மீது
அன்னை மரியின் சின்ன மடி மீது
அமர்ந்து துயில்கின்ற அழகே - 2
உனை
எடுத்து என் உள்ளத்தில் வைத்தேன்
என்னையும் இரட்சிப்பாய் என்றே - அன்னை
1. முன்னணைதான் என்
சின்ன உள்ளம்
கந்தையின் மீதே
கொண்டணைப்பேன் - 2
பொன் மணி போளங்கள்
என்னிடம் இல்லையைய்யா
என்னையே தந்து தாள் பணிந்தேன்
மலரடி பணிந்துன்னை துதிகனம் தினம் செய்ய
வந்தேனே
கவலைகள் கஷ்டங்கள் இனி ஒன்றும் எனக்கில்லை
உம்மாலே
அருள் ஒளியே.... விண் மலரே
அருள் ஒளியே விண் மலரே
உம்மைத் துதித்தேன் தினம்
தொழுதேன்
எனை
மறந்தேன் - அன்னை
2. பாவத்தை அன்றி பரமனே உமக்கு
படைத்திட பொருள் என்னிடம் இல்லை - 2
சாபமாம் தீ
நகரில் பாவி நான் வேண்டிடாமல்
சீராளா பொற்பாதம்
பணிந்தேன்
மலரடி பணிந்துன்னை துதிகனம் தினம் செய்ய
வந்தேனே
கவலைகள் கஷ்டங்கள் இனி ஒன்றும் எனக்கில்லை
உம்மாலே
அருள் ஒளியே.... விண் மலரே
அருள் ஒளியே விண் மலரே
உம்மைத் துதித்தேன் தினம்
தொழுதேன்
எனை
மறந்தேன் - அன்னை
Comments
Post a Comment