11 November 2024

மண்ணவர் பாவம் நீக்கிட

மண்ணவர் பாவம் நீக்கிட

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

                              பல்லவி

 

          மண்ணவர் பாவம் நீக்கிட

            மன்னவர் இயேசு பிறந்தார்

            சொன்னவர் வாக்கு நிறைவேற

            என்னவர் மண்ணில் பிறந்தார்

 

                             அனுபல்லவி

 

                        ஆ...ஆ...ஆனந்தம் பேரானந்தம்

                        இம்மானுவேல் பிறந்ததால்

 

                             சரணங்கள்

 

1.         இடையர் முதல் கடையர் வரை

            படையல்கள் கொண்டு வர - 2

            தடைகளெல்லாம் உடைத்தெறிந்து

            கொடை கொடுத்தார் (நம்) உலகினுக்கு - 2 - ஆ...ஆ...ஆனந்தம்

 

2.         பனி குளிரில் நடு இரவில்

            தொனி கேட்ட மேய்ப்பர்கள் -2

            இனி துன்பம் இல்லை நிதம்

            பாலன் இயேசு உலகில் வந்தார் - 2 - ஆ...ஆ...ஆனந்தம்

 

3.         வெள்ளி பூத்தது வானத்திலே

            அள்ளி கொடுத்தனர் ஞானிகளே -2

            துள்ளி தவழும் பாலகனாய்

            நம் உள்ளத்தில் (அவர்) பிறந்தாரே - 2 - ஆ...ஆ...ஆனந்தம்

 

 

- J. John Pravin (CSI Church, Mantharamputhoor)

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...