13 November 2024

பிறந்தாரே தேவ தேவன்

பிறந்தாரே தேவ தேவன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          பிறந்தாரே தேவ தேவன்

            பாலகன் வாழ்க வாழ்க

            பிறந்தாரே தேவ தேவன்

            பாலகன்

                        பூரண கிருபையின் அன்பிலே

                        பூரண கிருபையின் அன்பிலே

                        தேவனை வார்த்தையாய் - கால காலமாக

                        வாழ்ந்த மாந்தருக்கு - திட்டமாக

                        தேவனை வார்த்தையாய் - கால காலமாக

                        வாழ்ந்த மாந்தருக்கு

                        வார்த்தையே மாம்சமாய் - பிறந்தாரே

 

1.         வானில் தோன்றியதே புது நட்சத்திரம்

            கூடிய ஆயருக்கோ விசித்திரம்

            ஞானியர் கணித்தனர் வான சாஸ்திரம்

            ஏழை கோலமதாய் முழு தரித்திரம்

            கண்ணான கண்ணாய் கனியாய் அமுதாய்

            அழகில் பேரழகாய்

            பொன்னான பொன்னாய் மணியாய் முத்தாய்

            தவழும் ஓவியமாய்

            இருளிலே

            ஒளிரும் மிளிரும் மெய்யான ஒளியாய் - பிறந்தாரே

 

2.         இயேசுவின் பிறப்பாலே புது சரித்திரம்

            மாண்பாய் தருவாரே ராஜ வஸ்திரம்

            வீழ செய்திடும் உலக தந்திரம்

            பாவம் தகர்த்திடும் ஜெபமே மந்திரம்

            வேற்றுமை நீங்க ஒற்றுமை ஓங்கிய

            வாழ்வே வளம் நமக்கு

            பெண்ணும் ஆணும் அடிமையும் வேந்தனும்

            சமமே இறை கணக்கு

            அன்பிலே

            வளரும் வளரும் மேலான சமத்துவம் - பிறந்தாரே

 

 

- Bro. JK

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...