04 November 2024

ஆயிரம் ஆயிரம் தேவர்கள்

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                    ஆயிரம் ஆயிரம் தேவர்கள்

                        உலகிலே இருந்தாலும்

                        எவரின் பிறப்பின் நாளிலும்

                        அற்புதம் அதிசயம் நிகழவில்லை - (2)

            ஒருவரின் பிறப்பு மட்டுமே

            அழியாத சரித்திரமாய் அமைந்ததே

            மாசற்ற அன்பின் உருவமாய்

            ரட்சகர் பிறந்தாரே

                        இயேசு பிறந்தார் நமக்காய் பிறந்தார்

                        கொண்டாடி மகிழ்வோம் அவரைப் போற்றுவோம்

 

1.         முன்னனை மீதினில் தாழ்மை கோலமாய்

            இயேசு பாலன் பிறந்திட்டார்

            தீர்க்கன் வேத வாக்கு மண்ணில் நிறைவேற

            விண்ணின் வேந்தன் மண்ணில் வந்தார் - 2

            அதிசயமானவர் இவர் ஆலோசனை கர்த்தராம்

            இம்மானுவேலன் இவர் நித்திய பிதாவாம் - இயேசு பிறந்தார்

 

2.         இருளின் உலகத்தில் மங்காத தீபமாய்

            இயேசு பாலன் பிறந்திட்டார்

            மண்ணுயிர் பாவங்கள் சாபங்கள் நீக்கிட

            மீட்பின் ரட்சகர் மண்ணில் வந்தார் - 2

            அகிலத்தை ஆண்டிடும் மன்னாதி மன்னன் இவர்

            மனுக்குலம் மீட்க வந்த சமாதான பிரபுவாம் - இயேசு பிறந்தார்

 

 

- Sujin Jebaraj

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...