புல்லின் நுனியில் பனித்துளி
புல்லின் நுனியில் பனித்துளி
காத்திருந்த மணித்துளி
வாழ்வில் வந்த பேரொளி
வாழ வைத்த விண்ணொளி - 2
புல்லின் நுனியில் பனித்துளி
அல்லேலூயா அல்லேலூயா
ஓசன்னா ஓசன்னா அல்லேலூயா
1. விண்ணில் பூத்த தாரகை
பாதை காட்ட வானிலே
ஞானம் கொண்ட மூவரும்
தேடி பணிந்தே தொழுதனர் - 2
புல்லின் நுனியில் பனித்துளி
அல்லேலூயா அல்லேலூயா
ஓசன்னா ஓசன்னா அல்லேலூயா
2. பெத்லகேம் என்னும் ஊரிலே
சத்திரத்தில் பிறந்திட்டார்
முன்னணையில் பாலனாய்
தேவ மைந்தன் தோன்றினார் - 2
புல்லின் நுனியில் பனித்துளி
அல்லேலூயா அல்லேலூயா
ஓசன்னா ஓசன்னா அல்லேலூயா
3. மரண பயமும் தீர்ந்ததே
மானிடர் வாழ்வு மலர்ந்ததே
இயேசு உலகில் பிறந்ததால்
எல்லையில்லா மகிழ்ச்சியே - 2
புல்லின் நுனியில் பனித்துளி
அல்லேலூயா அல்லேலூயா
ஓசன்னா ஓசன்னா அல்லேலூயா
- Rev. K.A. JEREMIAH PRINCE
Comments
Post a Comment