14 November 2024

ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோசம்

ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப

            ரொம்ப சந்தோசம்

            இரட்சகர்தான் பிறந்துவிட்டார்

            மிகுந்த சந்தோசம்

                        குயில்போல் பாடிடவா

                        மயில்போல் ஆடிடவா

                        பறக்கும் தூதரைப்போல் வாழ்த்து சொல்லிடவா - 2

 

1.         சத்திரத்தின் தாழ்ப்பாள் எல்லாம் சாத்தியிருக்கு

            ஆணவனத்தின் உள்ளம் எல்லாம் பூட்டியிருக்கு

            ஆ-தொழுவம் மண்ணினிலே பூத்து இருக்கு

            ஆண்டவரின் வருகையினை காத்து இருக்கு

            சில்லென்று குளிரடிக்கும் காற்று இருக்கு

            காற்றினிலே தூதர்களின் பாட்டு இருக்கு

                        நட்சத்திரம் விண்ணில் இருக்கு

                        நற்செய்தியோ மண்ணில் இருக்கு - 2

                        மகிழவா மகிழவா வாழ்த்து சொல்லி மகிழவா

                        புகழவா புகழவா இறையை புகழவா - 2 - ரொம்ப ரொம்ப

 

2.         மனிதனையே தன் சாயலில் படைத்தவர்தானோ

            மனிதனைப்போல் மண்ணுருவாய் உதித்தவர்தானோ

            முற்பிதாக்கள் பிறக்கும் முன்னே இருந்தவர்தானோ

            நம்பிதாவின் இறைமகனாய் பிறந்தவர்தானோ

            உலகுக்கொரு பொக்கிசமாய் உதித்தவர்தானோ

            மண்ணுயிர்க்காய் தன் உயிரைக் கொடுத்தவர்தானோ

                        மண்ணில் வந்த மாபரன்தானோ

                        தன்னைத் தந்த கோமகன்தானோ - 2

                        மகிழவா மகிழவா வாழ்த்து சொல்லி மகிழவா

                        புகழவா புகழவா இறையை புகழவா - 2 - ரொம்ப ரொம்ப

 

 

Dr. V.C. Amuthan

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...