மா பரன்சேய் மனுவாயினாரே
391. இராகம்: கெம்பீரநாட்டை ஆதி தாளம்
பல்லவி
மா பரன்சேய் மனுவாயினாரே-யேசு
சரணங்கள்
1. பூவுலகில் நேர்ந்த பாவம் போக்கிடவென்றே பல
ஆவுக ளடையும் வீட்டில் அன்பதாகவே-மிகு
ஆவலாகவே மிகு-ஆசையாகவே-யேசு - மா
2. வானகத்தின் தூதர் பாதம் வாழ்த்திப்பாடவே அங்கு
கானகத்தின் ஆயர் காட்சி-கண்டு கூடவே-பேயோர்
காட்டிலோடவே-ஞானோர்-காணத் தேடவே-யேசு
- மா
3. உன்னதத்தில் மகிமையது ஓங்கிடவென்றும் இந்த
மன்னிடத்தில் சமாதானம் வாய்த்திடவென்றும்-தூதர்
வாழ்த்திடவன்று-தங்க-மங்களமென்றும்-யேசு
- மா
- J.S.
Comments
Post a Comment