14 November 2024

கர்த்தன் என் இயேசு ராஜன்

கர்த்தன் என் இயேசு ராஜன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

          கர்த்தன் என் இயேசு ராஜன்

            பெத்தலை முன்னணையில்

            நிந்தை அதை நீக்கிட

            மைந்தனாய் வந்துதித்தார்

 

                        மெத்தை இல்லை புல்லணை

                        மாடி இல்லை மாடடை

                        வீடும் இல்லை சத்திரமே

                        விந்தையாம் விந்தை அதே - கர்த்தன் என்

 

1.         போற்றினர் வான தூதர், கூடினர் ஆட்டிடையர்

            தேடின இராயர் மூவர், பொற்பாதம் பணியவே

            எல்லை இல்லாத பரன், புல்லணையைத் தேடி

            தெண்டனிட ஏகிடுவோர் சத்திரத்தை நாடி - கர்த்தன் என்

 

2.         பாதகர் பாவம் தீர்த்திட, நித்ய பிதாவின் சுதன்

            தன் உயிர் தனை தந்திட, மண்ணினில் வந்துதித்தார்

            என்னதான் ஈந்திடுவோம், மன்னவன் அன்புக்கீடாய்

            நெஞ்சமதை சொந்தமதாய், தூயர் பாதம் படைப்போம் - கர்த்தன் என்

 

 

- திருமதி. ஆக்னஸ் டேவிட்சன்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...