அன்பு பாலகன் இயேசு பிறந்தார்
அன்பாய் அவனியில் அவதாரித்தார் - நாம்
அகமகிழ்ந்து ஆர்ப்பரித்து
அன்பர் பிறப்பை அறிவிப்போமே!
அன்பர் பிறப்பை அறிவிப்போமே.
Wish you a Happy Happy Happy Christmas
Merry Merry Christmas to all - 2
1. கிறிஸ்து பிறப்பின் நல் வாழ்த்துக்கள்
கீதம் பாடி வாழ்த்துவோம் - 2
கிருபைகள் பெருகிடவே
கிறிஸ்தேசுவை போற்றிடுவோம் - 2
2. உன்னதத்தின் தேவ மகிமையை
உந்தனுக்காய் தேவன் தந்தார் - 2
உன்னதரின் புகழை என்றும்
நாமும் உயர்த்தியே வாழ்த்திடுவோம் - 2
3. பாவமில்ல இயேசு பாலகன்
பரிசுத்தராய் வந்துதித்தார் - 2
பாவ சாபங்களை போக்கியா
பரிகாரியை போற்றிடுவோம் - 2
- Mrs. Rani Wilson
No comments:
Post a Comment