டிசம்பர் பூக்கள் காற்றில் ஆடும் வண்ண
டிசம்பர் பூக்கள் காற்றில் ஆடும் வண்ண ராத்திரி
வெளிச்சம் மின்னும் விண்ணில் மின்னும் சின்ன ராத்திரி - 2
வணங்குவோம் இணங்குவோம் வணங்குவோம் - (2)
1. கார் காலமோ தூறல் போடுதே
மண்ணின் மீது சாரல் போடுதே
பூந்தென்றலோ
மெல்ல வீசுதே
பாலன் காதில் மெல்ல பேசுதே
பெருமையோ சிறிதும் இல்லை
தொழுவினில் மரியின் பிள்ளை
ஏழ்மைதான் இவரின் சாட்சியோ
தாழ்மைக்குள் இறைவன் ஆட்சியோ - 2 - டிசம்பர்
2. விண் என்பதோ
மண் என்பதோ
மண்ணகத்தில்
சொர்க்கம் வந்ததோ
வான் தூதரோ தேன் கானமோ
வானம் இங்கு பக்கம் வந்ததோ
உலகத்தின் புதிய விடியல்
வளருதே இளைய பூக்கள்
தாவீதின் ஊரைப் பார்க்கலாம்
ஈசாயின் வேரைப் பார்க்கலாம் - 2 - டிசம்பர்
Comments
Post a Comment