16 November 2024

மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்

மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                                    விண்ணில் தோன்றும் தாரகை எல்லாம்

                                    தேவதை ஆகும்

                                    வெண்ணிலாவோ தேவன் அமரும்

                                    வாகனம் ஆகும்

                                    ஞான ஜோதியே உயர்வான ஜோதியே

                                    தானாகவே உலகில் இறங்கும்

                                    தர்ம ஜோதியே

 

                   மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்

                        நல்ல மனிதர் நடுவில் குழந்தை வடிவம் பெறுகின்றார் - 2

                        எண்ணில்லாத அதிசயங்கள் செய்து காட்டவே

                        ஒரு புண்ணியரின் மடியினிலே புதல்வனாகிறார் - மண்ணுலகில்

 

1.         மழலை மொழிகள் கேட்கக் கேட்க மனசு கொள்ளாதோ

            மடியில் வந்து அமரும் போது மயக்கம் கொள்ளாதோ

            பார்வைப்பட்டால் போதும் நம் பாவம் யாவும் நீங்கும்

            கைகள் தொட்டால் போதும் உடன் கவலை எல்லாம் தீரும் - மண்ணுலகில்

 

2.         அடியவர்கள் மடியினிலே ஆண்டவரோ, பிள்ளை

            அரவணைக்கும் அடியவரோ, இறைவனுக்கும் அன்னை

            கொடுமை, பாவம், துயரிலிருந்து மீட்பவர் வந்தார்

            குலம் தழைக்க குழந்தையாக மேய்ப்பவர் வந்தார் - மண்ணுலகில்

 

 

(சினிமா பாடல்)

YouTube Link
YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...