என் மீது ஏனோ இத்தனை பாசம்
என் மீது ஏனோ இத்தனை பாசம்
என் மீது ஏனோ அளவற்ற நேசம் - 2
தவறு
செய்யும் போது கூட காட்டி கொடுக்காதவர்
உம்மை மறந்து வாழ்ந்த போது கூட விட்டு
விலகாதவர் - 2
அன்பே அழகே ஆராதனை
ஆயுள் முழுதும் ஆராதனை - 2
1. உம்மை நானும் பாடிடுவேன்
உயிர் வாழும் நாளெல்லாம் உயர்த்திடுவேன்
- 2
கால்கள் சறுக்கும் நேரமெல்லாம் கிருபையாக
வந்தவர்
சோர்ந்து போன நேரமெல்லாம் புது பெலனைத்
தந்தவர் - 2
கிருபையானவரே
ஆராதனை
மகிமையானவரே
ஆராதனை - 2
2. துன்பத்தின் நேரத்தில் உடன் இருந்தீர்
கண்ணீரின் பாதையில் கரம் பிடித்தீர் -
2
கலங்கி நின்ற நேரங்களில் கண்ணீரை துடைத்தவர்
உடைக்கப்பட்ட நேரங்களில் உறுதுணையாய் நின்றவர்
- 2
உதவி செய்தவரே ஆராதனை
உயர்த்தி வைத்தவரே ஆராதனை
- 2
- AARON BALA
Comments
Post a Comment